கூடுதல் கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்கா முடிவு!!
கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த தினமும் கூடுதலாக 10 லட்சம் ‘பேரல்’ கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போரால் சர்வதேச அளவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 4500 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதனால் உலகளவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் 40 ஆண்டுகள் இல்லாத வகையில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. எனவே விலைவாசியை கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தினமும் கூடுதலாக 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை சந்தைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.