ரஷ்ய அமைச்சர் இன்று டில்லி வருகை!!!
புதுடில்லி :ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று டில்லி வருகிறார்.ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கிய பின் முதல்முறையாக, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று சீனா வந்தார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் பேச்சு நடத்தினார்.செர்கெய், நாளை மாலை டில்லி வருகிறார். இங்கு நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசவுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.