பஸ் கட்டண உயர்வுக்கு கேரள அரசு பரிந்துரை!!
திருவனந்தபுரம் : கேரளாவில் பஸ், ஆட்டோ, டாக்சிக்களின் குறைந்தபட்ச கட்டணத் தை உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 8 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தவும், அதற்கடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கு வசூலிக்கப்படும் 90 பைசாவை 1 ரூபாயாக உயர்த்தவும் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. அரசின் இந்த முடிவால் தனியார் பஸ் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வு பரிந்துரை மிக குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.