துவக்கத்திலேயே கொளுத்தும் வெயில்: சென்னையின் குடிநீர் கையிருப்பு சரிவு!!
இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 11.7 டி.எம்.சி., ஆகும். தற்போது, புழலில், 2.92 டி.எம்.சி.,யும், செம்பரம்பாக்கத்தில், 2.85 டி.எம்.சி.,யும் நீர் இருப்பு உள்ளது. பூண்டியில், 2.01 டி.எம்.சி.,யும், சோழவரத்தில், 0.62 டி.எம்.சி., இருப்பு உள்ளது. தேர்வாய் கண்டிகையில், மொத்த கொள்ளளவான 0.50 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழையால், ஜன., மாதம் 11 டி.எம்.சி.,க்கு மேல், ஏரிகளில் நீர் இருப்பு இருந்தது. கோடை துவக்கத்திலேயே, சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால், குடிநீர் ஏரிகளில் இருந்து ஆவியாதல் அதிகரித்துள்ளது. எனவே, நீர் கையிருப்பு குறைய துவங்கியுள்ளது. கடந்தாண்டு, இதேநாளில், 9.43 டி.எம்.சி., நீர் இருப்பு இருந்தது. தற்போது, நீர்இருப்பு 8.92 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.