தினம் ஒரு கைப்பிடி வெந்தயகீரை! உடம்பில் என்னென்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?!!

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் இக்கால காலட்டத்தில் நோயின்றி ஆரோக்கியமாக வாழக்கூடியவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

இதற்கு நாம் கண்ட கண்ட மருந்துகளை எடுக்கமால் நாம் வீட்டு சமையலுக்கு பயன்படும் பொருட்களை வைத்தே குணப்படுத்த முடியும்.

நம் அன்றாட சமையலில் வெந்தயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பல்வேறுப்பட்ட நோய்களை குணப்படுத்துகின்றது.

இதில் நிறைய நார்ச்சத்துகள், புரோட்டீன், இரும்புச் சத்து, மாங்கனீஸ் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

இத உடலுக்கும் ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகிறது. அவை என்ன என்ன என்பதை பார்ப்போம்.

  • குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சும் திறனையும் கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தியையும் மேம்படுத்துகிறது.
  • ஆந்த்ரோக்ளோரோஸிஸ் மற்றும் டயாபெட்டீஸ் நோயாளிகளின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
  • கெட்ட கொலஸ்ட்ரால் எல்டிஎல் மற்றும் ட்ரைகிளிசரைடு ஆகியவற்றை குறைக்கிறது.
  • வெந்தய டீ கொண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தலாம்.
  • வெந்தய டீ யை பருகுவதால் மலச்சிக்கல், வாயுத் தொல்லை, அமிலத்தன்மை, சீரணமின்மை மற்றும் வயிற்று வலி போன்றவற்றை போக்குகிறது.
  • கல்லீரல் வேலையை நன்றாக்கி அசிடிட்டி போன்றவற்றை குறைக்கிறது. வயிற்றுப் போக்கை தடுக்கிறது.
  • ஆண்களின் ஹார்மோனான டெஸ்டிரோடிரோன் சுரப்பை அதிகரிக்கிறது.
  • ஆண்மையை அதிகரித்து, நீர்த்துப் போன விந்துவை கெட்டிப்பட வைத்துவிடும். விந்து வேகமாக வெளியேறுவதும் தடைபடும்.
  • இதய நோய்கள் வருவதை தடுக்கிறது, வெந்தயத்தின் கொலஸ்ட்ரால் குறைக்கும் திறன் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
  • ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
  • வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.
  • வெந்தயம் உடம்பில் உள்ள அழற்சியை போக்குகிறது. நாள்பட்ட இருமல், கொப்புளங்கள், சுவாச அழற்சி, எக்ஸிமா போனற சரும நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • உடம்பு வலி, சிறுநீரக கோளாறுகள் மற்றும் நிணநீர் முனைகளில் வீக்கம் போன்றவற்றை சரி செய்கிறது.
  • வெந்தயக்கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும்.
  • வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

எனவே இப்படி ஏராளமான நன்மைகளை தரும் வெந்தய இலைகளை உணவில் சேர்த்து நாமும் பயன் பெறுவோம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.

Leave a Reply

Your email address will not be published.