‘காஷ்மீர் பைல்ஸ்’ படம்: புதுச்சேரியில் வரி ரத்து!!
புதுச்சேரி : பா.ஜ. – எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்று ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்திற்கு கேளிக்கை வரியை புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது.
காஷ்மீரில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் நாடு முழுதும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சினிமா வசூல் ரீதியாக வெற்றி அடைந்துள்ளது.இப்படத்தை பிரதமர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பா.ஜ. முக்கிய தலைவர்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர்.புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான பா.ஜ. – எம்.எல்.ஏ.க்கள் இப்படத்திற்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.
அதை ஏற்று ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்கு கேளிக்கை வரியை புதுச்சேரி அரசு ரத்து செய்துள்ளது. புதுச்சேரி அரசிதழில் இதற்கான ஆணையை உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ளது.புதுச்சேரி திரையரங்குகளில் சினிமா டிக்கெட்டுக்கு கேளிக்கை வரியாக 25 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இது மட்டுமன்றி சினிமா டிக்கெட் கேளிக்கை வரிக்கு சேர்த்து 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.