கஞ்சா வேட்டை சென்னையில் 350 பேர் கைது!!
சென்னை:மாநிலம் முழுதும் கஞ்சா விற்பனைக்கு எதிராக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் இரண்டு நாட்களில் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்கும் வகையில் ‘ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் ஏப். 27 வரை தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.அதன்படி மாநிலம் முழுதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக போலீசாரின் அதிரடி வேட்டை நடக்கிறது. இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா வியாபாரிகள் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக சென்னையில் 50 பேர்; கோவையில் ஒடிசாவைச் சேர்ந்த நிபாஸ் பண்டிகி என்பவர் உட்பட 32 பேர்; ஈரோடு மாவட்டத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.தொடர் சோதனையில் மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்குவர் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.