ஏவுகணை சோதனை 2வது முயற்சியும் வெற்றி!!
பாலசோர்: தரையிலிருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை, நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலசோர் ஏவுதளத்தில் இருந்து, வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை பரிசோதனை நேற்று நடந்தது. இந்த ஏவுகணை வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. இரண்டு முறை இந்த சோதனை நடத்தப்பட்டது.சோதனை வெற்றிகரமாக நடந்ததாக, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறி உள்ளது. கடந்த ௨௭ம் தேதிஅன்றும், இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகளை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.