அமைச்சர் துரைமுருகனின் துபாய் பயணம் ரத்தானது ஏன்? !!

வேலுார் : துபாய் செல்ல விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின் வந்த போன் அழைப்பால், அமைச்சர் துரைமுருகன் சோகத்துடன் வீடு திரும்பிய தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தை முடித்து, சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். பின் காலை 9:50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ‘எமிரேட்ஸ்’ விமானத்தில் துபாய் செல்ல, காலை 8:30 மணிக்கே துரைமுருகன், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.

அவரது பழைய பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டதால், புதிதாக எடுத்து இருந்தார். சிக்கல்தவறுதலாக துபாய் விசாவில், புதிய பாஸ் போர்ட் எண்ணை குறிப்பிடாமல், பழைய எண்ணை குறிப்பிட்டதால், விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது; அதனால், வீட்டுக்கு வந்து விட்டார்.

விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறு சரி செய்யப்பட்டு, பின்னர் விசா பெறப்பட்டது. அன்று மாலை 6:50 மணிக்கு ‘ஏர் இந்தியா’ விமானத்தில் துபாய் செல்ல, விமான நிலையத்திற்கு வந்தார்.வழக்கமான பரிசோதனைகள் முடிந்து, விமானத்தில் ஏறி அமர்ந்தார். அப்போது அவருக்கு வந்த மொபைல் போன் தகவலால், விமான பணியாளர்களை அழைத்து, ‘நான் இன்று பயணம் செய்ய விரும்பவில்லை’ என கூறி விட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

Leave a Reply

Your email address will not be published.