வங்கிகளும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஞாயிற்றுக்கிழமையில் தங்களுடைய சேவையை தொடர பொதுமக்கள் கோரிக்கை!!!
மத்திய மாநில அரசுக்கு உட்பட்ட அனைத்து வங்கிகளும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஞாயிற்றுக்கிழமையில் தங்களுடைய சேவையை தொடர பொதுமக்கள் கோரிக்கை மாறிவரும் இன்றைய பொருளாதார சூழ்நிலை ஏற்றவாறு நாட்டிலுள்ள தொழிலாளர்கள் ,சிறு வணிகர்கள், பெரு வணிக நிறுவனங்கள், அதில் வேலை பார்க்கும் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அன்று தங்களுடைய தேவைகளை நேரடியாக சென்று விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் தங்களுடைய சேவைகளை பூர்த்தி செய்ய இயலும் என்பது பெருவாரியான மக்களுடைய அன்பார்ந்த வேண்டுகோள்.
இதனால் பொதுமக்களுக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பல்வேறு தரப்பட்ட பொதுமக்களின் கோரிக்கை வணிகர்கள் சிறு குரு தொழிற்சாலைகள் வியாபார மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மிகுந்த பயனை அடையும் என்பது பொது மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கை. இதற்கு பதிலாக வாரநாட்களில் சுழற்சி முறையில் ஒவ்வொரு வங்கியும் ஒரு நாளில் விடுமுறை எடுத்துக் கொள்ளும் நடைமுறை நாட்டில் பின்பற்றுமானால் அது அனைவருக்கும் பயனுள்ளதாகவும் பொது மக்களுடைய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்பது மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்பது பெரும்பாலான மக்களுடைய வேண்டுகோள் விருப்பம்.
மத்திய மாநில அரசு இந்த நடைமுறையை செயல்படுத்துமா. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இதற்கு ஒத்துழைக்குமா. இன்சூரன்ஸ் நிறுவனங்களில் மற்றும் வங்கியில் பணியாற்றும் அதிகாரிகள் தொழிற்சங்கங்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று ஒருவேளை இந்த நிலை பின்பற்றுமானால் அது பொது மக்களுக்கும் நாட்டுக்கு நலம் பயக்கும் என்பது நிச்சயம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன்.