மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்: உபரியா… பற்றாக்குறையா?
கோவை: கோவை மாநகராட்சியின், 2022-23ம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்), மாமன்ற கூட்டத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு பின், மேயர் வெளியிட்டு, பட்ஜெட் மீது உரை நிகழ்த்த உள்ளார்.
கோவை மாநகராட்சியில், 2021-22ம் ஆண்டுக்கான திருத்திய வரவு – செலவு திட்ட அறிக்கை, 2022-23ம் ஆண்டுக்கான உத்தேச வரவு – செலவு திட்ட அறிக்கை, இன்று (30ம் தேதி) காலை, 11:00 மணிக்கு, மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. உதவி கமிஷனர் (கணக்கு) சுந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர் தயாரித்த அறிக்கையை, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், மேயர் கல்பனாவிடம் சமர்ப்பிப்பார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.