பூச்சாண்டி காட்டாதீங்க பாரதி!!

நீட்’ விலக்கு மசோதாவை, உடனே ஜனாதிபதிக்கு ஏன் அனுப்பவில்லை? அதை விட உங்களுக்கு வேறு என்ன வேலை? என்று துணிச்சலாக கேள்வி கேட்பாரா இந்த பாரதி. ஆட்சி அதிகாரம், தங்கள் கட்சி வசம் உள்ளது என்பதாலும், இனிமேல் நம்மை யாரும் அசைத்துப் பார்க்க முடியாது என்ற நினைப்பில், பாரதி ரொம்ப தெனாவட்டாகப் பேசலாம்.

யார் மீதும் அவதுாறு வழக்குகள் போட்டு, கோடிக்கணக்கில் பறித்து விடலாம் என்று நினைத்தால், அது நிச்சயம் நடக்காது. முதல்வருக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கவும், நீதிமன்றத்தில் வாதாடவும் பல நுாறு பேர் முன் வருவர் என்றால், மத்தியிலும், நாட்டில் பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும், பா.ஜ., கட்சியின் தமிழக தலைவரான அண்ணாமலைக்கு ஆதரவாக எத்தனை பேர் நீதிமன்றத்தில் ஆஜராக முன்வருவர் என்பது ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியாதா என்ன?

சும்மா பூச்சாண்டி காட்டும் வேலையை எல்லாம் விட்டு விட்டு, அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு சரியான பதில் கொடுங்கள். அவரது குற்றச்சாட்டு தவறு என்பதை நிரூபிக்க முற்படுங்கள். வேண்டாம் வெத்து வேட்டு அறிக்கை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.