கடலில் விடப்பட்ட அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள்!!!!
மயிலாடுதுறை: சீர்காழி அருகே கூழையார் கடலில் 2200 அரிய வகை ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இணைந்து கடலில் விட்டனர். இதுவரை மூன்று கட்டங்களாக 15,572 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோர பகுதிகளில் சேகரிக்கப்படும் ஆமை முட்டைகள் இந்த பொறிப்பகத்தில் பாதுகாக்கபட்டு வருகிறது. இந்நிலையில் பொறித்த ஆமை குஞ்சுகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், வனச்சரகர் டேனியல் அகியோர் இனைந்து கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும். இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிக்கு வரும். ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும். இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகின்றன. இதில் இவ்வாண்டு கூழையார் கடல் பகுதியில் ஆமைகள் இட்ட சுமார் 32,000 முட்டைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மூன்றாவது கட்டமாக 2200 குஞ்சுகள் முட்டையிலிருந்து பொறித்து வெளிவந்தது. இதுவரை மூன்று கட்டங்களாக 15,572 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது. இன்று விடப்பட்ட ஆமை குஞ்சுகள் இந்நாளில் இருந்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கத்திற்காக இதே கடற் பகுதிக்கு வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.