ஓட்டலுக்குள் புகுந்த மினி டிராக்டர்; இறைச்சிக் கடைக்காரர் பலி!!
ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் சங்கம் முன், சரவணா ஓட்டல் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் உள்ளது. அவ்வழியாக 16 வயது சிறுவன், டிப்பர் பொருத்தப்பட்ட மினி டிராக்டர் ஓட்டி வந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.
இதில், வெளியே நின்றிருந்த இறைச்சிக் கடைக்காரர் ஆறுமுகம், 70 மற்றும் ஓட்டல் கடை மாஸ்டர் மருது, 35, ஆகியோர் மீது மோதியதில் படுகாயமடைந்தனர். இதில், இறைச்சிக் கடைக்காரர் ஆறுமுகம், 70, என்பவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கால் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்த மருது, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.