ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது ஜோ பைடனின் நோக்கம் அல்ல – ஜெர்மனி பிரதமர்!!

ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை நேட்டோவோ அல்லது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்று ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் ரஷிய அதிபர் புதின் குறித்து பேசும்போது, “புதின் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க முடியாது” என்று கூறினார். இதுகுறித்து விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை மற்றும் பிற அமெரிக்க அதிகாரிகள் ஜோ பைடன் உண்மையில், புதினின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறினர்.

மேலும் இதுகுறித்து ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்சிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “புதினின் ஆட்சியை கவிழ்ப்பது நேட்டோவின் நோக்கம் அல்ல, மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் நோக்கமும் அல்ல. ஆட்சி மாற்றம் எங்கள் நோக்கம் அல்ல என்பதை நாங்கள் இருவரும் முழுமையாக ஒப்புக்கொள்கிறோம்.” என்று கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.