மும்மத முறைப்படி வி.ஏ.ஓ., திருமணம்!!!

மயிலாடுதுறை–மயிலாடுதுறையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் மும்மத முறைப்படி திருமணம் செய்தார்.

மயிலாடுதுறை, சின்ன எரகலி தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 30; கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, திருவையாறைச் சேர்ந்த புவனேஸ்வரி, 26, என்ற பட்டதாரி பெண்ணை நிச்சயம் செய்தனர். குழந்தை பருவத்தில் இருந்து முஸ்லிம், கிறிஸ்துவர்களுடன் நெருங்கி பழகிய புருஷோத்தமன், தன் திருமணத்தை, மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் நடத்த வேண்டும் என பெற்றோரிடம் தெரிவித்ததோடு, மணப்பெண் வீட்டாரிடமும் தெரிவித்துள்ளார்

.அவர்கள் ஒப்பு கொண்டபடி, நேற்று முன்தினம் மாலை, புருஷோத்தமன்- – புவனேஸ்வரி திருமணத்தை முஸ்லிம் முறைப்படி பள்ளிவாசலில் இமாம் நடத்தி வைத்தார்.தொடர்ந்து, கிறிஸ்துவ முறைப்படி, திருமணத்தை பாஸ்டர் நடத்தி வைத்தார். நேற்று 27ம் தேதி காலை ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தது. புருஷோத்தமன் கூறுகையில், ”மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், இந்த திருமணத்தை நடத்தினேன்,” என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.