முதல்வரின் விமான பயண செலவை தி.மு.க., ஏற்றது: அமைச்சர் விளக்கம்!!
சென்னை : ”முதல்வர் ஸ்டாலினின் துபாய் தனி விமான பயண செலவை தி.மு.க., தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது; அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை,” என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
முதல்வருடன் துபாய் சென்றுள்ள அவர் அங்கிருந்து அனுப்பிய அறிக்கை: முதல்வரின் துபாய் பயணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். தகுந்த நேரத்தில் விமான வசதிகள் கிடைக்காததால் முதல்வர் பயணத்திற்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.தனி விமான பயண செலவுகளை தி.மு.க., தலைமை ஏற்றுள்ளது. முதல்வரின் பயணத்திற்கு அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.