சர்வதேச விமான சேவை: பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்!!
திருப்பூர்: சர்வதேச விமான சேவை மீண்டும் துவங்கிஉள்ளதால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உலக நாடுகளுக்கு பறந்து சென்று, ஆடை தயாரிப்பு ஆர்டர்களை வசப்படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், பின்னலாடை ரகங்களை தயாரித்து, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா என உலகளாவிய நாடுகளின் சந்தைக்கு அனுப்பிவைக்கின்றனர்.ஏற்றுமதி மேம்பாட் டுக்கு, விமான போக்குவரத்து முக்கியமானதாக உள்ளது.
திருப்பூர் பின்னலாடை துறையினர், ஆயத்த ஆடை, தொழில்நுட்ப கண்காட்சிகளில் பங்கேற்பதற்காகவும், வர்த்தகர்களை சந்திப்பதற்காகவும், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.வெளிநாட்டு கண்காட்சிகள் மூலம், புதிய வர்த்தகர்களுடனான அறிமுகம், ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிகளவில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.