யோகி பதவியேற்பு விழா; ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பட குழுவுக்கு அழைப்பு!
லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக, யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று(மார்ச் 25) பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்பட குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 403 இடங்களில், பா.ஜ., கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.லக்னோவில் நேற்று நடந்த பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டசபை பா.ஜ., தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில், இன்று மாலை 4:00 மணிக்கு, உத்தர பிரதேச முதல்வராக, யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, பல்வேறு மாநிலங்களின் பா.ஜ., முதல்வர்கள் என பலரும் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகையர் உட்பட அனைவருக்கும், விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.