பழங்கால கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு; மக்கள் போராட்டம்; போலீஸ் தடியடி!!

உடுமலை :உடுமலை அருகே கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளை தடுத்து, தீக்குளிப்பு முயற்சி, தடியடி,தள்ளுமுள்ளு என பல மணி நேரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு, பரபரப்பு நிலவியது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை பள்ளபாளையம் செங்குளம் பகுதியிலுள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை, நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றும் பணி, நேற்று காலை துவங்கியது. முதற்கட்டமாக, 300க்கும் மேற்பட்ட போலீசாருடன், அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம், 22 வீடுகளை அகற்றினர்.தொடர்ந்து, அங்கிருந்த ஆதிகருவண்ணராயர் வீரசுந்தரி கோவிலை இடிக்க சென்ற போது, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

‘ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் இக்கோவில், பல நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. நீர் வழித்தடத்திற்கும், கோவிலுக்கும் தொடர்பு இல்லை. மின் இணைப்பு, வரி செலுத்துவது உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளது. கோவிலை இடிக்க அனுமதிக்கமாட்டோம்’ என எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.