டில்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா: லோக்சபாவில் இன்று தாக்கல்!

புதுடில்லி:தலைநகர் டில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்டதிருத்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
டில்லியில், கடந்த 2011ல், டில்லி மாநகராட்சி, தெற்கு டில்லி, வடக்கு டில்லி, கிழக்கு டில்லி என மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன. ஆனால், மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்க இயலாமை, நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன. சிக்கல்களை தீர்க்க மூன்று மாநகராட்சிகளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து டில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்ட திருத்த மசோதா -2022 க்கு மத்திய அமைச்சரவை கடந்த 21 ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று (மா்ரச் 25) நடக்க உள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடரின் லோக்சபாவில் மாநகராட்சிகளை இணைக்கும் சட்ட திருத்த மசோதா -2022 வை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Leave a Reply

Your email address will not be published.