எழும்பூர் ரயில் நிலையம் ரூ.400 கோடியில் நவீனமயமாகிறது!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம், 400 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாகிறது.

சென்னையில், முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையம், இந்தோ சாராசனிக் பாணியில் கட்டப்பட்டது. 1905ம் ஆண்டு கட்டமான பணி துவங்கப்பட்டு, 1908ம் ஆண்டு, ஜூன், 11ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையம் பல்வேறு காலக்கட்டங்களில் தேவையான வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது, 11 நடைமேடைகளுடன் இயங்கி வருகிறது. கொரோனா தாக்கத்துக்கு பின், நிலையத்தில் இருந்து, 28 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையம் வழியாக, 23 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையத்தில் உள்ள புறநகர் மின்சார ரயில் நிலையம் மற்றும் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் வழியாக தினமும், 4.5 லட்சம் பயணியருக்கு மேல் வந்து செல்கின்றனர்.

இந்நிலையம், 400 கோடி ரூபாய் செலவில் நவீன படுத்தப்பட உள்ளது. பாரம்பரிய கட்டடத்தின் நிலை மாறாமல், அதே வடிவில் நவீன தொழில் நுட்ப வல்லுனர்களால் புதுப்பிக்கப்பட உள்ளது. நிலையத்தில் பயணியருக்கான வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. ஓய்வறைகள் வசதி அதிகரிக்கப்பட உள்ளது. நடை மேடைகள் புதுப்பித்து அமைக்கப்பட உள்ளன.பயணியர் நடை மேம்பாலங்களின் தரம் உயர்த்தப்பட உள்ளன.மின் துாக்கி, நகரும் படிக்கட்டு வசதிகள் நடைமேடையின் இருபகுதிகளிலும் நிறுவப்பட உள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.