லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் போர்; ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்தும் ரஷியா
உக்ரைன் மீது ரஷியா 28- வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
மார்ச் 23, 8.45 AMரஷியாவுக்கு சீனா சமீபத்தில் ஆயுதங்களை அனுப்பியதற்கான ஆதாரங்கள் எங்களிடம் எதுவும் இல்லை – அமெரிக்கா தகவல்
மார்ச் 23, 05.40 AM
உக்ரைனில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு அதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாக ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைனில் உணவு உற்பத்தியை மீண்டும் தொடங்கத் தவறினால், ‘அது பூமியில் நரகமாக மாறி விடும் என உலக உணவுத் திட்ட இயக்குநர் டேவிட் பீஸ்லி கூறியுள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது உலகளாவிய உணவுப் பற்றாக்குறையைத் தவிர்க்கும். போர் தொடர்ந்தால் உலகம் முழுவதும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.
உக்ரைனும் ரஷ்யாவும் உலகின் மொத்த தானியங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை உற்பத்தி செய்கின்றன என்று அவர் கூறினார்.
மார்ச் 23, 04.40 AM
உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷிய போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
மார்ச் 23, 03.40 AM
ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டதாக ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கும் மேலாக மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் இடைவிடாது குண்டுவீச்சு தாக்குதல் நடத்துவது எதற்காக என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த போர் மூலம் துன்பம், அழிவு மட்டும் ஏற்படும் என்றும் போரினால் எதையும் வெல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மார்ச் 23, 02.40 AM
ஜெலென்ஸ்கி உரையாற்ற நேட்டோ அழைப்பு
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வியாழன் அன்று காணொளி இணைப்பு மூலம் உரையாற்ற நேட்டோ அழைப்பு விடுத்துள்ளது.
அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே அணு ஆயுதம் – ரஷியா
ரஷியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
மார்ச் 23, 01.40 AM
தலைநகர் கீவின் புறநகரான மகாரிவ்வை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அங்கு ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் படைகளும் உறுதியுடன் போரிட்டன. கடுமையான சண்டைக்கு பின்னர் அந்த நகரை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இந்தநிலையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் உக்ரைன் படைகளுக்கும் நடைபெற்ற தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக கிவ்வில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மார்ச் 23, 00.40 AM
மரியுபோல் நகரம், 3 வாரங்களுக்கு மேலாக தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. அங்கு தகவல் தொடர்பு முற்றிலும் முடங்கி உள்ளது.
இந்த நகரை எப்படியாவது வசப்படுத்தி விட வேண்டும் என்று ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் உக்ரைன் படைகளும் எதிர்த்து மல்லு கட்டி வருகின்றன. ஆனால் 2,300 அப்பாவி மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நகரில் இருந்து ஆபத்தான முறையில் தப்பித்துள்ள பொதுமக்கள், நகரமெங்கும் தெருவுக்குத் தெரு துப்பாக்கிச்சண்டைகள் நடைபெறுவதாகவும், புதைக்கப்படாத மனித உடல்களைத் தாண்டி தாங்கள் கடந்து ஓடியதாக தெரிவித்தனர்.
இந்தநிலையில், மரியுபோல் நகரத்தில் இருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற முயற்சிப்பதாக உக்ரைன் துணை பிரதமர் கூறியுள்ளார்.
மரியுபோலில் ரஷிய மற்றும் உக்ரைன் படைகளுக்கு இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் தங்களை பாதுகாத்து கொள்ள 100,000 பொதுமக்கள் மரியுபோலில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதாக உக்ரைனின் துணைப் பிரதமர் கூறியுள்ளார்.
மார்ச் 22, 23.30
ரஷிய மற்றும் உக்ரைன் படைகள் மரியுபோல் நகரில் சண்டையிட்டு வருவதாக உக்ரைனின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 22, 22.35
உக்ரைனில் 27 நாளாக போர் நடைபெற்றுவரும் நிலையில் உணவு, எரிபொருள் இன்றி ரஷிய ராணுவம் தவித்து வருவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா திணித்துள்ள போர், நேற்று 27-வது நாளை எட்டியது. தொடர்ந்து அந்த நாட்டின் மீது தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களை ரஷிய படைகள் கட்டவிழ்த்து விட்டு வருகின்றன.
இதனால் தங்கள் சொந்த நாட்டை விட்டு 35 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அகதிகளாய் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பிரசவ ஆஸ்பத்திரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அணுமின்நிலையம், உருக்காலை என தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நாட்டில் 62 ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட சுகாதார கட்டமைப்புகள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 37 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
உக்ரைனுக்கு வெற்றி
தலைநகர் கீவின் புறநகரான மகாரிவ்வை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அங்கு ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் படைகளும் உறுதியுடன் போரிட்டன. கடுமையான சண்டைக்கு பின்னர் அந்த நகரை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
அங்கிருந்து ரஷிய படைகளை விரட்டியடித்தன. இது உக்ரைனுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி ஆகும். இதனால் ஒரு முக்கிய நெடுஞ்சாலை மீதான கட்டுப்பாட்டை உக்ரைன் படைகள் மீட்டெடுக்க முடிந்தது. மேலும் கீவ் நகரைச்சுற்றிலும் வடமேற்கில் இருந்து ரஷிய படைகளை சுற்றிவளைப்பது தடுத்துள்ளது.
300 ஏவுகணைகள் வீச்சு
அதே நேரத்தில் உக்ரைன் நகரங்கள் மீதும், அவற்றில் வாழ்கிற பொதுமக்கள் மீதும் தாக்குதல் தொடுக்கும் நோக்கத்துடன் வான்படைகளையும், பீரங்கிகளையும் ரஷியா குவித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை உக்ரைன் மீது ரஷியா ஏவி உள்ளது என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மரியுபோல் நகரைப்பிடிக்க…
மரியுபோல் நகரம், 3 வாரங்களுக்கு மேலாக தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. அங்கு தகவல் தொடர்பு முற்றிலும் முடங்கி உள்ளது.
இந்த நகரை எப்படியாவது வசப்படுத்தி விட வேண்டும் என்று ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் உக்ரைன் படைகளும் எதிர்த்து மல்லு கட்டி வருகின்றன. ஆனால் 2,300 அப்பாவி மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நகரில் இருந்து ஆபத்தான முறையில் தப்பித்துள்ள பொதுமக்கள், நகரமெங்கும் தெருவுக்குத் தெரு துப்பாக்கிச்சண்டைகள் நடைபெறுவதாகவும், புதைக்கப்படாத மனித உடல்களைத் தாண்டி தாங்கள் கடந்து ஓடியதாக தெரிவித்தனர்.
எலும்பு கூடுகளாக கட்டிடங்கள்…
இந்த நகரில் கட்டிடங்கள் எலும்புக்கூடுகள் போல காட்சி தருகின்றன என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அங்கிருந்து போலந்து சென்ற 77 வயதான மரியா பியோடோரோவா, “மரியுபோல் நகரில் இனி கட்டிடங்கள் எதுவும் இல்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் சாலையில் ரஷியா நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளன.
ஜோ பைடன் எச்சரிக்கை
இதற்கு மத்தியில் இத்தாலி நாடாளுமன்றத்தில் நேற்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி காணொலிக்காட்சி வழியாக பேசினார். அப்போது அவர், “நாங்கள் உயிர் பிழைக்கும் போரின் விளிம்பில் இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.
அவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சுடனும் பேசினார். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் வாடிகன் ஒரு மத்தியஸ்தராக செயல்பட முடியும் என்று போப் ஆண்டவரிடம் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைனில் ரஷிய அதிபர் புதின், ரசாயன, உயிரி ஆயுதங்களை பயன்படுத்த தயாராகி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.