ரூ. 3 ஆயிரம் கோடியை தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கிய அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி!

உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்சி ஸ்காட். இவர் இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாயை மனிதநேய பணி ஆற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு பணக்காரர்கள் தங்கள் சொத்தின் பெரும் பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு தானமாக அளிப்பதாக உறுதிமொழி எடுத்து கோப்புகளில் கையெழுத்திட்டனர். அதில் மெக்கென்சி ஸ்காடும் ஒருவராவார்.
இந்த நிலையில் அவர் தான் உறுதிமொழி அளித்தது போலவே மனிதநேய பணிகளுக்காக தொண்டு நிறுவங்களுக்கு இந்திய மதிப்பில் ரூ. 3 ஆயிரத்து 317 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். 
இந்த தொகையானது அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் மூலம் பல்வேறு மனிதநேய பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.
இவர் பல்வேறு சமுதாயம் மற்றும் பொருளாதார சமத்துவம் சார்ந்த பணிகளுக்காக நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாய்களை  நன்கொடையாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.