மோடி புகழ்பாடும் அரங்கமாக பார்லி., மாற்றம்: திரிணமுல் குற்றச்சாட்டு!!
பார்லிமென்டை பிரதமர் மோடியின் புகழ்பாடும் அரங்கமாக, பா.ஜ., உறுப்பினர்கள் மாற்றிவிட்டனர்’ என திரிணமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், நான்கில் வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் ௧௪ல் துவங்கியது.முதல் நாளன்று பிரதமர் மோடி பார்லி.,க்கு வந்த போது, பா.ஜ., உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி, ‘மோடி, மோடி’ என கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
சட்டசபை தேர்தல்களில் பெற்ற வெற்றிக்காக அவர்கள் பிரதமருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், லோக்சபாவில் நேற்று நடந்த விவாதத்தின் போது, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொயித்ரா பேசியதாவது:இத்தாலி தலைநகர் ரோமில், முதலாம் நுாற்றாண்டில், உள்அரங்கில் நடக்கும் வாள் சண்டை போட்டியில் பங்கேற்கும் வீரர் வரும் போது, அவரது பெயரை சொல்லி ரசிகர்கள் வரவேற்பர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.