தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு பிரதமா் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆட்சிதான் காரணம் என குற்றம்சாட்டி, இம்ரான்கானுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்துள்ளன. 

ஆளும் கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் இம்ரான்கானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் அவரது ஆட்சி கவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக கூறி பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த நாட்டு தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
கைபர் பக்துங்வா மாகாணத்தின் உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 16-ந்தேதி அங்குள்ள ஸ்வாட் நகரில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் மற்றும் மந்திரிகள் பலர் பங்கேற்றனர். 
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் பிரதமர் இம்ரான்கான் மற்றும் மந்திரிகள் 5 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.