தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடக்கம்!!!
தென்ஆப்பிரிக்கா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.
தொடரை வெல்ல இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.