வேளாண் கொள்கையில் மாற்றம் தேவை: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ‘பளிச்’

திருப்பூர்: ”தமிழக அரசின் வேளாண் கொள்கைகளில் மாற்றம் வர வேண்டும்,” என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளார்.இது குறித்து, திருப்பூரில் அவர் கூறியதாவது: தமிழக வரலாற்றில், இரண்டாவது முறையாக, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில், 43 சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், ஒன்று கூட, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் அறிவிப்பு இல்லை.
கரும்புக்கு, 4 ஆயிரம், நெல்லுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படவில்லை. நெல் விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம் நிலுவை குறித்தும் அறிவிப்பு இல்லை. பழம், காய்கறி, கீரை உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் தேவையில்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Leave a Reply

Your email address will not be published.