வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை இன்று (மார்ச் 22) முதல் ரூ.50 அதிகரித்துள்ளது. இதன்மூலம் சென்னையில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 915.50 ரூபாயில் இருந்து ரூ.965.50 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் கடந்த 137 நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையல், இன்று 76 பைசா அதிகரித்துள்ளது. இதனால், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இல்லத்தரசிகள், குடும்ப தலைவர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.
