மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி 229 ரன்கள் சேர்ப்பு!!!

ஹாமில்டன்: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி, 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்திய அணி 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி, இன்று (மார்ச் 22) வங்கதேச அணியுடன் மோதியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.