மகனை கட்சிக்குள் கொண்டு வந்த வைகோவுக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி!

சிவகங்கை : ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தன் மகனை கட்சிக்குள் கொண்டு வந்ததற்கு, மாவட்ட செயலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, ‘தி.மு.க.,வுடன் ம.தி.மு.க.,வை இணைக்க வேண்டும்’ என, கருத்து தெரிவித்தனர். இதற்கு, சிவகங்கை நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு, போலீசார் குவிக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க., செயலர் செவந்தியப்பன், விருதுநகர் செயலர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் செயலர் செங்குட்டுவன், நாகை முன்னாள் செயலர் குத்தாலம் மோகன், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம்.சிவகங்கை அவைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட துணைச் செயலர்கள், தங்கவேல், குணசேகரன், விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி பாரதமணி ஆகியோர், சிவகங்கை ம.தி.மு.க., அலுவலகத்தில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

செவந்தியப்பன் கூறியதாவது: என்ன நோக்கத்திற்காக ம.தி.மு.க., உருவாக்கப்பட்டதோ, அதை செய்யவில்லை. ஈழத்தமிழர் நல்வாழ்வுக்காக கட்சி துவங்கப்பட்டது. 30 ஆண்டுகளில் கருணாநிதி, ஸ்டாலின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டுவதிலேயே வைகோ குறியாக இருந்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Leave a Reply

Your email address will not be published.