உலகில் காற்று மாசு அதிகம் கொண்ட தலைநகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம்!!

காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி,  பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பால் (WHO) காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவானது எந்த ஒரு நாட்டிலும் பதிவாகவில்லை. 
இது குறித்து உலகம் முழுவதும் சுமார் 6,475 நகரங்களில் மாசு தரவுகளின் கணக்கெடுப்பை சுவிஸ் மாசு தொழில்நுட்ப நிறுவனம் நடத்தியது.
அதன்படி உலக சுகாதார அமைப்பால் (WHO) காற்று மாசுபாட்டின் பாதுகாப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 93 நகரங்களில் 10 மடங்கு அதிக மாசுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி 2021-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த மாசு அளவு மேலும் மோசமடைந்ததுள்ளது. உலகின் மிகவும் காற்று மாசுபட்ட தலைநகரமாக இந்தியாவின் புதுடெல்லி உள்ளது. அதேபோல் உலகின் அதிக காற்று மாசுபாட்டை உடைய நாடாக வங்காளதேசம் உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.