இன்றைய ‘கிரைம் ரவுண்ட் அப்’; பெண்கள் பலாத்காரம்: துணை நடிகர் கைது!!!
மூன்று இளம் பெண்கள் நிகழ்ச்சி ஒன்றுக்கு வரவேற் பாளராக சென்றனர். அப்போது அந்த மூன்று பேரிடமும் ஒரே நேரத்தில் முகமது ஷயாத் ‘சாட்டிங்’ செய்துள்ளார்.அந்த இளம் பெண்களில் ஒருவர் என் ‘பாய் பிரண்ட்’ என முகமது ஷயாத்தின் படத்தை தோழியிடம் காட்டினார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் ‘அவர் என் பாய் பிரண்ட்’ என சொந்தம் கொண்டாடினார்.அப்போது மூன்றாவதாக முகமது ஷயாத்துடன் சாட்டிங் செய்தவாறு இருந்த பெண் ‘அவர்என் பாய் பிரண்ட். திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். இதோ பாருங்கள் இப்போதும் சாட்டிங் செய்கிறார்’ என காட்டியுள்ளார். மூவரும் மோசம் போய் விட்டதை உணர்ந்து அடுத்தடுத்து போலீசில் புகார் அளித்ததால் முகமது ஷயாத் சிக்கினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.