பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவியேற்பு..!!
சண்டிகர்: பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டனர். பிரம் ஷங்கர் ஜிம்பா, ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், லால் சந்த் கட்டாருசக், குர்மீத் சிங் மீட் ஹேயர், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் கடந்த 16ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.