தலைநகரில் போதை பொருள் விற்பனை அமோகம்: 189 பேர் அதிரடி கைது!!
சென்னையில், மெத்தம்பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை அதிகரித்து வருவதை அடுத்து, போலீசாரின் தொடர் நடவடிக்கையில், 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், போதைப் பொருள் மற்றும் கஞ்சா கடத்தலும், விற்பனையும் அதிகரித்துள்ளதாக தெரியவந்தை அடுத்து, கடும் நடவடிக்கைக்கு முடிவு செய்யப்பட்டது.
‘போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோர், இதன் பின்னணியில் இருப்போரின் தொடர் சங்கிலியை அறுக்க வேண்டும். வெளி மாநிலங்களுக்கு சென்று போதை பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய வேண்டும்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.