அரசியலுக்கும், கட்சிக்கும் ஊடகம் அப்பாற்பட்டவை: பிரதமர் மோடி கருத்து!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் மலையாள பத்திரிகை மாத்ருபூமியின் நுாற்றாண்டு விழாவை பிரதமர் மோடி இணையவழியாக நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊடகங்களால் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் கண்டிருக்கிறேன். அதற்கு சிறந்த உதாரணமாக தூய்மை இந்தியா திட்டத்தை கூற முடியும். ஒவ்வொரு ஊடகமும் இந்த திட்டத்தை மிகுந்த நேர்மையுடன் எடுத்துச் சென்றது.

மேலும் யோகா, உடற்பயிற்சி மற்றும்  ‘பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்’ போன்ற திட்டங்களை திட்டங்களை பிரபலப்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஊடகங்கள் அரசியலுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அப்பாற்பட்டவை. அவை வருங்காலத்தில் சிறந்த தேசத்தை உருவாக்க வேண்டும். ஏனெனில், இன்றைய காலகட்டத்தில் உலகம் இந்தியாவிடம் பல எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். சட்டப்பேரவை கூட்டம் நடப்பதால் முதல்வர் பினராய் விஜயன், மோடியின் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், ஆன்லைன் மூலமாக அவரும் உரையாற்றினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.