வழித்தடத்தில் சாலை பணி… தடுமாறி விழுந்தது யானை!!!

நீலகிரி மாவட்டம், குன்னுார் – மேட்டுப்பாளையம் சாலையில், நந்தகோபால் பாலம் அருகே உள்ள யானை வழித்தடத்தில், நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதனால், யானைகள் இடம் பெயருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ரன்னிமேடு பகுதியில் முகாமிட்ட ஏழு காட்டு யானைகள், நேற்று முன்தினம் மாலை தண்ணீர் தேடி சாலையை கடந்தபோது, வழி தெரியாமல் திணறின. வாகனங்களை விரட்டியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தடுப்புச்சுவர் அமைக்கும் இடத்தை யானைகள் கடக்க முயன்றன. அப்போது, குட்டி யானை ஒன்று பள்ளத்தில் உருண்டு, ரயில் பாதையில் விழுந்தது.பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால், அங்கு தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். யானைகள் செல்ல போதிய அளவில் வழி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, வனத்துறையினர் கூறினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Leave a Reply

Your email address will not be published.