தேனி தி.மு.க.,வில் களையெடுப்பு: உத்தரவை மதிக்காத 3 நிர்வாகி நீக்கம்!

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை, தி.மு.க.,வினர் கைப்பற்றிய விவகாரத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, மூன்று நகர செயலர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், தி.மு.க.,வை சேர்ந்த போட்டி வேட்பாளர்கள் களமிறங்கி வெற்றி பெற்றனர்.

இது, கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறைமுக தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி, பதவிகளை கைப்பற்றிய தி.மு.க.,வினர் ராஜினாமா செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி சிலர் ராஜினாமா செய்தனர்; பலர் பதவி விலக மறுத்து, அடம் பிடித்து வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.

Leave a Reply

Your email address will not be published.