கோவையின் வளர்ச்சிக்கு என்ன தேவை? பட்டியல் போட்ட தொழில் அமைப்பினர்!!

கோவையின் வளர்ச்சிக்கான திட்டங்களைப் பற்றிக் கருத்துக் கேட்ட கோவை தெற்கு எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனிடம், பல்வேறு தொழில் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில், முக்கியமான ஐந்து திட்டங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
தமிழக பட்ஜெட், இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில் கோவைக்கு என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன என்ற எதிர்பார்ப்பு, எல்லாத் தரப்பிலும் எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத் தில் தி.மு.க.,வுக்கு படுதோல்வி கிடைத்ததால், ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டிலும், அதற்குப் பின்னும் கோவைக்கென பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கோவையில் தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளதுடன், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் முதல் முறையாக முழுமையான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது.அதனால், இன்றைய பட்ஜெட்டில் கோவைக்கு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, அதிகமாகவே உள்ளது. ஒருவேளை அறிவிக்கப்படாதபட்சத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் கோவைக்கான கோரிக்கைகளை எழுப்பினால், அதன்பின்பு அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.