கைதிகளை உறவினர்கள் சந்திக்கலாம்: சிறைத்துறை அனுமதி!!

சிக்கமகளூரு: கொரோனா தொற்றால் கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்துள்ளதால், கைதிகளை உறவினர்கள் சந்திக்க சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சிக்கமகளூரு மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதிகள் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரானா  காரணமாக இந்த கைதிகளை நேரடியாக சந்திப்பதற்கு சிறைச்சாலை துறை அனுமதி மறுத்திருந்தது. இதையடுத்து சந்திக்க வேண்டி வருபவர்கள் அங்கு வந்து அனுமதிபெற்று வீடியோ கால் மூலம் சந்தித்தனர்.

இந்நிலையில் தற்போது கொரானா  முற்றிலும் குறைந்து உள்ள காரணத்தினால் சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளை சந்திப்பதற்கு காலை 11 மணி முதல் 12 மணி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. சிறைச்சாலை துறை அப்படி சந்தித்து பேசுவார்கள் முன்கூட்டியே சிறைத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதிகாரிகள் அனுமதி வழங்கும் தேதியில் வந்து கைதிகளை உறவினர்கள் சந்திக்கலாம் என  மாவட்ட சிறைச்சாலை துறை கண்காணிப்பு அதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Leave a Reply

Your email address will not be published.