இணையதள மோசடி; உடனே புகார் அளித்தால் போடலாம் ‘கிடுக்கிப்பிடி’!!!
கோவை: கோவை மாவட்டத்தில் இணையதள மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு, போலீஸ் நடவடிக்கை மூலம் 18 லட்சம் ரூபாய் மீட்டுத் தரப்பட்டுள்ளது. 40 லட்சம் ரூபாய், மோசடிப் பேர்வழிகள் எடுக்க முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது.
கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறியதாவது:இணைதளம் வழியாக நடக்கும் குற்றங்கள் அதிகரித்து விட்டன. ஆன்லைன் நிதி மோசடி, ஓ.டி.பி., வாங்கி மோசடி செய்வது, வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி போல் பேசி மோசடி செய்வது, பாலியல் துன்புறுத்தல் செய்வது, அடையாளத்தை திருடி மோசடி செய்வது போன்ற சம்பவங்கள் பற்றி புகார்கள் அதிகம் வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.