ஆர்ஜித சேவா டிக்கெட் நாளை மறுநாள் வெளியீடு!
திருமலை ஏழுமலையான் ஆர்ஜித சேவைகளை முன்னிட்டு, நாளை மறுநாள் (மார்ச்20) இணைய தளத்தில் டிக்கெட்டுகளை வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஏப்ரல் முதல் திருமலையில் ஏழுமலையானுக்கு ஆர்ஜித சேவைகளை தொடங்க உள்ளது.இதற்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாள் தேவஸ்தான இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த சேவை டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்து ஆர்ஜித சேவையில் பங்கேற்கலாம். இதில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.
இதற்காக, www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து சேவையில் கலந்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.அதோடு, திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்களுடன் கொரோனா தடுப்பூசி இரண்டு ‘டோஸ்’ செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசனத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த கொரோனா பரிசோதனை ‘நெகடிவ்’ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.