அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு!!
சென்னை: தமிழக சட்டசபை இன்று கூடியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய துவங்கியதும், பேச வாய்ப்பு கேட்டு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் முடிந்ததும் பேச வாய்ப்பு தருவதாகவும், தற்போது அதிமுகவினர் கூறும் கருத்துகள் அவை குறிப்பில் இடம்பெறாது, பட்ஜெட் உரையை கேட்குமாறு எனவும் தெரிவித்தார். இதனை ஏற்காத அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.