போக்குவரத்துத் துறை துணை ஆணையர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு!!
சென்னை: பதவி உயர்வுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக சென்னை போக்குவரத்துத் துறை துணை ஆணையர், உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எழிலகத்திலுள்ள போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் அறையில் 14-ம் தேதி ரூ.35 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்