பிரதமர் மோடி போல் ஆக வேண்டுமா? அதிக புத்தகங்கள் படிக்க அண்ணாமலை அறிவுரை!!!

பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டும் எனில் அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 74 சதவீத மக்கள் சமூக ஊடகங்களில் உள்ளனர்; இளைஞர்களின் மனதை சமூக ஊடகங்கள் ஆக்கிரமித்துள்ளன. பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டும் என்றால் அதிகமாக புத்தகங்களை படிக்க வேண்டும்; வரலாறு, அரசியலை தெரிந்துகொள்ள வேண்டும். ‘வாட்ஸ் ஆப்’பில் கிசு கிசு பேசுவதை இளைஞர்கள் குறைத்து கொள்ள வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.