கொசஸ்தலையில் 3 பாலங்கள் கட்ட தேவை..ரூ.47.50கோடி..
வெள்ள பாதிப்பை தடுக்க நடவடிக்கை எப்போது?திருவாலங்காடு, மார்ச் 17–கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் உடைந்த இரண்டு தரைப்பாலம் மற்றும் புதிதாக ராமாபுரத்தில் என மொத்தம் மூன்று உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு, 47.50 கோடி ரூபாய் தேவை என ஒன்றிய நிர்வாகம், திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. குப்பம்கண்டிகை பகுதியில் உயர்மட்ட பாலம் உடனடியாக கட்டி பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அதே போல், எல்.வி.புரம் தரைப்பாலம் வெள்ளத்தில் உடைப்பு ஏற்படுவதால், இங்கும் உயர்மட்ட பாலம் கட்டினால் தான் எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.