இறுகும் லஞ்ச ஒழிப்பு விசாரணை: அச்சத்தில்அதிகாரிகள்!!!

 முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்வதாலும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை இறுகுவதாலும், கோவை மாநகராட்சி உயரதிகாரிகள் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். வருமானத்தை விட அதிகமாக, 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் அவரது உறவினர்கள், நண்பர்கள், பினாமிகள் வீடு, அலுவலகம் என, 59 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். சுப்ரீம் கோர்ட்டில் வேலுமணி தரப்பில் மேல்முறையீடு செய்த வழக்கில், இரு வாரத்துக்குள் பதிலளிக்கக்கோரி, டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், டெண்டர் முறைகேடு வழக்கு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. மற்றொரு புறம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை இறுகி வருவதால், மாநகராட்சி உயரதிகாரிகள் பலரும் பீதியில் உறைந்திருக்கின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.