பெட்ரோல் விலை: அரசு பதில்…
புதுடில்லி பெட்ரோல் – டீசல் விலை குறித்த கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி ராஜ்யசபாவில் கூறியதாவது: சர்வதேச சந்தை விலை, அன்னிய ரூபாய் மதிப்பு, வரி விகிதங்கள் உள்நாட்டு போக்குவரத்து செலவு உள்ளிட்டவை அடிப்படையில் பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்வதேச அளவிலான அரசியல் நிலவரங்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சாமானிய மக்களின் நலனை பாதுகாக்க தேவையான நேரங்களில் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.