திருச்சி தனலட்சுமிக்கு குவியும் வாழ்த்து!!!

கேரளாவில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டியில் தமிழக வீராங்கனை தனலட்சுமி சேகர் தங்கப்பதக்கம் வென்றதோடு, பிடி உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 (Indian Grand Prix 1) தடகள போட்டியின், 200 மீட்டர் பெண்களுக்கான பிரிவில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி சேகர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.தேசிய அளவிலான இந்த போட்டிகளில் நேற்று பெண்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில், தேசிய அளவில் சிறப்பு வாய்ந்த வீராங்கனைகளான ஹீமா தாஸ், டூட்டி சந்த், தமிழகத்தின் தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். போட்டியில், தனலட்சுமி 23 புள்ளி 21 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.

Leave a Reply

Your email address will not be published.