தஞ்சையில் திருமணத்திற்கு புத்தகங்களை வழங்கிய நண்பர்கள்!!!

தஞ்சையில், நண்பனின் திருமணத்திற்கு, மேள, தாளம் மூலம் முழங்க புத்தகங்களை சீராக நண்பர்கள் வழங்கினார்கள்.  மோகன் குமாரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று (15ம் தேதி) இரவு நடந்தது. அப்போது மோகன் குமாரின் நண்பர்கள் ஒன்றிணைந்து திருக்குறள், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம், காமராஜரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை மேளம், தாளம் முழங்க சீதனமாக மணமக்களுக்கு வழங்கினர். புத்தக சீரை பெற்றுக் கொண்ட மணமக்கள், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்

Leave a Reply

Your email address will not be published.